கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் - டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Idam Porul

Top Menu

Top Menu

கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் - டோக்கியோ ஒலிம்பிக் 2020

 


டோக்கியோ ஒலிம்பிக் 2020 கோல்ப் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்று நேற்று வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில் நூலிலையில் தகர்ந்தது அந்த நம்பிக்கை. தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை, ஆட்டத்தின் நிலையையே மாற்றியதால் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார் அதிதீ அசோக்.

கோல்ப் மகளிர் ஆட்டத்தில் நேற்றைய தினம் வரை இரண்டாவது இடத்தை
தக்க வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கை கொடுத்து வந்த அதிதீ அசோக் ஒட்டு மொத்த ஆட்ட முடிவில் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை நூலிழையில் தவற விட்டார். பதக்கத்தை மட்டும் பெற்றிருந்தால் இந்தியா கோல்ப் பிரிவில் பெறும் முதல் பதக்கம் இதுவாக இருந்திருக்கும்.

“ எனினும் கோல்ப் பிரிவில் இந்தியா அடைந்த உயர்ந்த நிலை இதுவாகும், அடுத்த முறை இந்த நிலையை பதக்க நிலையாக மாற்றுங்கள் அதிதீ அசோக் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates