மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் தொடர்ந்து சராசரியாக கொரோனோ தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக 38,353 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 497 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 4,29,179-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு புறம் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தொடர்ந்து உருமாருகின்ற கொரோனோவை சமாளிக்க முடியாமல் திணருகிறோம் என்பது தான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
“ உருமாறிய கொரோனோவிற்கு தற்போதைய தடுப்பூசிகள் பெருமளவில் பயனளிக்காத நிலையில் மறுபடியும் தடுப்பூசி சம்மந்தமான ஆய்வுகளை தொடங்கி இருக்கிறதாம் சில நாடுகள். தற்காத்துக்கொள்ளுங்கள் அது ஒன்றே இங்கு நாமும் நாடும் மீள்வதற்கான வழி “
Post a Comment