பேரிடர் எச்சரிக்கை,கனிமவியல்,வனவியல் குறித்த கண்காணிப்பிற்கான அது நவீன செயற்கை கோள் GSLV F10 மூலம் நாளை அதிகாலை 5:43-ற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
கொரோனோ சூழலில் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்கு இடையூறுகள் இருந்த நிலையில் எல்லா செயல்நிலைகளும் தாமதமாகி வந்தன. தற்போது சூழல் தகுந்தவாறு அமைந்தததால் இந்த வருடத்தின் இரண்டாவது GSLV வகை ராக்கெட் ஆனது EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கை கோளுடன் நாளை விண்ணில் பாய இருக்கிறது.
இது பேரிடர்,விவசாயம்,கனிமம்,வனவியல் உள்ளிட்ட கண்காணிப்புகளை அதி நவீன முறையில் மேற்கொள்ளும்.
“ பூமியின் பரப்பிலிருந்து 36,000 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டு பூமியை செல்பி எடுக்க இருக்கிறது இஸ்ரோ அனுப்புகின்ற இந்த EOS-3 செயற்கை கோள் “
Post a Comment