வெளியாகிறது நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி! - Idam Porul

Top Menu

Top Menu

வெளியாகிறது நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

 


நடிகர்,மக்களின் கலைஞர்,இயற்கையின் பாதுகாவலன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படும் கலைவாணர் விவேக் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் கடந்த ஏப்ரல் அன்று காலமானார். தற்போது அவர் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான LOL- எங்க சிரி பாப்போம் என்னும் நிகழ்ச்சி அமேசான் வலை தளத்தில் ஆகஸ்ட் 27 அன்று வெளியாக இருப்பதாக அறியப்படுகிறது.

மிர்ச்சி சிவா மற்றும் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.  இதில் RJ விக்னேஷ் காந்த், பிரேம்ஜி அமரன், பவர் ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி கணேஷ், அபிஷேக் குமார் உள்ளிட்ட பத்து பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சிரிக்க வைத்தாக வேண்டும் இதில் யார் தன்னுடைய நகைப்பை அடக்கி கொண்டு கடைசி வரை களத்தில் நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எதுவாகினும் மீண்டும் பத்மஸ்ரீ விவேக் அவர்களை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“ மரணித்தும் வாழ்வதில் தான் ஒரு மனிதனின் அடையாளம் என்பது இருக்கிறது, இங்கு கலைவாணர் அவர்கள் கலைகளில் வாழ்கிறார், கடைக்கோடி மனிதனின் சிரிப்பில் வாழ்கிறார், எழுந்து நிற்கும் மரங்களில் வாழ்கிறார், நாம் சுவாசிக்கும் உயிரிலும் வாழ்கிறார், மனிதனுக்கு தான் அழிவு உயர்பெரும் கலைஞர்களுக்கும் அவர்கள் கொடுத்துச்சென்ற கலைகளுக்கும் இல்லை “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates