ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் அரசிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில் அங்கு அமைதி சீர்குலைந்து பொது மக்கள் கொல்லப்படும் நிலையும் நிலவி வருகிறது. இதனைக்குறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ராஷித்கான் தனது ட்விட்டரில் “ உலக தலைவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும் இங்கு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு நிலம் பறிக்கப்படு உடைமைகள் பறிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் “ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர் புரிந்து வந்த அமெரிக்க படை தற்போது கொஞ்ச கொஞ்சமாக நாடு திரும்பி வரும் நிலையில் இதனை பயன்படுத்திக்கொண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு பகுதிகளாக புகுந்து அரசுக்கு எதிராக போர் புரிந்து அரசு ஆளும் பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். அரசின் ராணுவம் பதிலடி கொடுத்து வந்தாலும் அதிக பலத்தோடு முன்னோக்கி சென்று ஒவ்வொரு பகுதிகளாக கைப்பற்றி வருகிறார்கள் தலிபான்கள்.
இதனால் ஆப்கானிஸ்தானே கலவர பூமியாக காட்சி கொள்கிறது. அரசின் முக்கிய பிரமுகர்களையும் கூட விட்டு வைக்காமல் சுற்றி வளைத்து சிறை பிடித்து வருகிறது தலிபான்கள் கூட்டம். இதனால் பொதுமக்கள் என்ன செய்வதென்றே அறியாமல் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
“ ஒரு நாட்டில் மக்களின் அமைதி சீர்குலைந்தால் அந்த நாடு சீர்குலைகிறது என்று அர்த்தம். உலக நாடுகளே ஒரு நாடும் நாட்டு மக்களும் அமைதியை நாடுகின்றனர் மீட்டுக் கொடுங்கள் “
Post a Comment