புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர்,சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக்காக EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
கொரோனோவின் காரணமாக தொடர்ந்து தாமதமான இஸ்ரோவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் தற்போது தொடங்கிய முதல் பணியே தோல்வியில் முடிந்தது ஏமாற்றமளிப்பதாய் இருந்தாலும் இந்த சூழலில் இருந்து மீண்டு வருவோம் என்று உத்தரவளித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.
“ விண்ணில் இருந்து செல்பி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும் மீண்டு வருவது என்பது நம் இந்தியாவிற்கே உள்ள வழக்கம் மீண்டு வருவோம் உலக நாடுகளை ஒரு நாள் உற்றுப் பார்க்க செய்வோம் - மென்மேலும் தொடருங்கள் செயல் பணிகளை இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களே “
Post a Comment