தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரித்து வந்தாலும் மக்கள் கொரோனோ தடுப்பு முறைகளை முறையாக கையாளாதாதன் விளைவு மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனோ தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,195-ஆகவும் தொற்றின் காரணமாக 490 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருந்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு 490 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,29,669 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் 52 கோடியை கடந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என்று ஆங்காங்கே உருமாறிக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் அடுத்து என்ன வகையில் உருமாறக்கூடும் என்று விழி பிதுங்கி நிற்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
“ மக்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறிய சிறிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்தாலே போதும் இங்கு பரவுதல் கட்டுப்படுத்தப்படும். கட்டுப்பாடுகள் தனிமனிதனிடம் இருந்து தளர்கின்ற போது தான் இந்த சிறிய அலைகள் சுனாமிகள் ஆகின்றன. ஆக்கி விட வேண்டாம். பொறுப்புடன் இருப்போம். சமூகத்தை காப்போம் “
Post a Comment