1960-இல் ‘களத்தூர் கண்ணம்மா’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார் கமல்ஹாசன். இன்றோடு இந்த மனிதன் சினிமாவிற்கு வந்து 62 வருடம் ஆகிறது. 220 படங்களுக்கு மேல் நடித்தாகிற்று. இன்றும் தீரவில்லை இந்த மனிதனுக்குள் இருக்கும் அந்த நடிப்பின் ஊற்று.
நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,நடன இயக்குனர்,எழுத்தாளர் என்று எத்தனை பரிணாமங்கள் தான் இந்த 62 வருடத்திற்குள்! சிறந்த நடிகர் என்னும் முறையில் நான்கு தேசிய விருதுகள், சிறந்த தயாரிப்பாளர் என்னும் முறையில் ஒரு தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு சார்பில் வழங்கிய பத்து விருதுகள் என்று கலைக்கென இவர் வாங்கிய விருதுகளை சேமித்து வைக்கவே இரு வீடு வேண்டும். மேலும் கலை மாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், செவாலியே என்று இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக கிடைத்த அங்கீகாரங்கள் பல.
கலைகளின் மய்யமாக இருந்தவர் தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் மற்றுமொரு உருவமும் எடுத்துள்ளார். எல்லா கதாபாத்திரமும் அவருக்கு திரையில் பொருந்தியது அரசியிலிலும் பொருந்துமா பொறுத்திருந்தே பார்ப்போம்.
“ கலை என்பது ஆளும் பகுதிகள் எனில் கமல் என்னும் கலைஞன் அதன் ராஜாங்கம் “
Post a Comment