ரஷ்யாவில் தினசரி கொரோனோ பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 808 பேர் கொரோனோவிற்கு பலி ஆகி உள்ளதாக ரஷ்யன் பெடரல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,68,049 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்ச இறப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது ரஷ்யா.
ரஷ்ய ஊடகங்கள் கொரோனோ இறப்பை பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவில் ஒட்டு மொத்த இறப்பு மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ இறப்பு அளவு ரஷ்ய பெடரேஷனால் குறைவாக காமிக்கப்படுவதாகவும் கூறி வருகின்றன.தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை தினசரி பலி உச்சத்தை எட்டியுள்ளது.
தினசரி கொரோனோ பாதிப்பும் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக சராசரியாக இருபதாயிரத்திற்கும் குறையாமல் இருந்து வருகிறது. ரஷ்ய பெடரேசனிடம் இதைப்பற்றி கேட்டால் முறையாக தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களும் உருமாறிய கொரோனோவுமே அதிகபட்ச இறப்பிற்கு காரணம் என்று அவர்களை கை காட்டி வருகிறது.
“ முறையாக புள்ளி விவரங்களை கூட கையாளாத ஒரு அரசால் கொரோனோவை எப்படி கையாள முடியும். தொடர்ந்து பொய்யான புள்ளி விவரங்களையே கொரோனோ இறப்பில் காட்டுகின்ற ரஷ்ய அரசை வறுத்து எடுக்கிறது அந்த நாட்டு ஊடகங்கள் “
Post a Comment