அல்ஜீரியாவின் கைபல் பிராந்தியந்தில் தொடங்கிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து பல்வேறு இடத்திற்கும் பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் அந்நாட்டில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அமற்றப்பட்டு வருகின்றனர். வெப்ப நிலையும் 50 டிகிரி செல்சியசை அல்ஜீரியாவில் தொட்டுள்ளதால் காட்டுத்தீயை அணைப்பதில் தொடர்ந்து சிரமங்கள் நிலவி வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இந்த காட்டுத்தீ பதிவாகி வருகிறது. தொடர்ந்து மாறி வரும் காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று சுற்று சூழல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“ இயற்கை தன் சூழலை எப்போதும் மாற்றுவதில்லை நாம் அந்த இயற்கைக்கு கொடுக்கின்ற இடரே நமக்கு பதில் விளைவாக வந்து சேர்கிறது. உயிர் காக்கும் அல்ஜீரிய வீரர்களே உங்கள் உயிரை அரணாக வைத்து போராடுகிறீர்கள். இயற்கையின் கோபத்தீயை தணித்து அல்ஜீரிய மக்களை மீட்டெடுங்கள் “
Post a Comment