தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 16 முதல் 26 வரை மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்த இருப்பதாக தென்கொரிய பத்திரிக்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே எலியும் பூனையுமாய் திரிகின்ற வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் தற்போது அமெரிக்காவும் புகுந்துள்ளதால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.’தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து நடத்த இருக்கிற போர் ஒத்திகை எங்களுடன் போர் புரியவா..? எதற்கும் தயாராக இருக்கிறோம். முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். எதிர்வினையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-இன் சகோதரி கிம் யோ ஜாங்.
“ ஒரு பக்கம் வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு இன்னொரு பக்கம் தென்கொரியாவிடம் போர் ஒத்திகை செய்கின்ற அமெரிக்காவின் இரட்டை வேடம் இந்த உலகம் அறிந்ததாயினும், கலகம் ஏற்படுவத்துவதில் ஒரு வல்லமை மிக்க நாரதர் என்று எளிமையாக சொல்லிவிடலாம் “
Post a Comment