டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ராவிற்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நீராஜ் சோப்ரா தன்னுடைய அடுத்த கட்ட இலக்கு என்பது உலக சாம்பியன்சிப் வெல்வதே என்றும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதிருந்தே தொடங்க இருப்பதாகவும் தன் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா தற்போது நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தனது அபார திறமையை நிரூபித்து தங்கம் வென்றிருந்தார். தற்போது அவர் குறி வைத்திருப்பது உலக சாம்பியன்ஷிப். இதற்கு முன்னர் தடகள பிரிவில் அஞ்சு பாபி ஜார்ஜ் 2003-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார். அதை தற்போது தங்கமாக மாற்றிட கடுமையாக உழைப்பேன் என்று நீராஜ் சோப்ரா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தினமாக ஆகஸ்ட் 7-யை தேசிய ஈட்டி எறிதல் தினமாக அறிவித்தது இந்திய தடகள சம்மேளனம். ஈட்டி எறிதல் பிரிவை இந்தியர்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு இனி வருடம் ஒருமுறை ஆகஸ்ட் 7 அன்று மாநிலங்களுக்கு இடையேயான ஈட்டி எறிதல் போட்டி நடத்தப்படும் என்று சம்மேளனம் அறிவித்துள்ளது.
“ இருபத்தி மூன்று வயதில் ஒரு இளைஞனுக்கு எத்தனையோ தேடல்கள் இருக்கும் ஆனால் இந்த இளைஞன் இந்தியாவிற்கு தங்கங்களைத் தேடி தருகிறான் - வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா “
Post a Comment