STR 47 - வெந்து தணிந்தது காடு - Idam Porul

Top Menu

Top Menu

STR 47 - வெந்து தணிந்தது காடு

 


வேல்ஸ் இன்டர்நேசனல் பிலிம் - கவுதம் மேனன் - ஏ ஆர் ரகுமான் - சிலம்பரசன் இணையும் படத்திற்கு முதலில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அது ’வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் - சிம்பு ஏற்கனவே இணைந்து ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்னும் படத்தில் மாபெரும் ஹிட் அடித்திருந்தது. பின்னர் அடுத்து இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் மூலம் அது சாத்தியமாகி உள்ளது.

கவுதம் மேனன் படம் என்றாலே காதல் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும்,ஆனால்  இந்த படம் போஸ்டரிலேயே வித்தியாசம் காட்டியிருக்கிறார் இந்த கவுதம்மேனன்.

“ காவியமாய் படத்திற்கு பெயரைச்சூட்டி கவிதையாய் படமெடுக்கும் கவுதம் மேனனின் மேஜிக் வெந்து தணிந்தது காட்டிலும் தொடருமா...? “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates