திரைத்துறை தவிர தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அஜித் தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி போட்டிகளுக்கு தயாராகி வருவதாக அஜித் அவர்களின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
திரையில் அஜித் அவர்கள் சாதிக்காதது எதுவும் இல்லை. ஏற்கனவே கார் ரேஸ், மற்றும் சிறிய இலகு ரக விமான தயாரிப்பு என்று நடிப்பதை தவிர வேறு சில துறைகளிலும் ஈடுபட்டு வந்த அஜித் இடையில் துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற 46-ஆவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் 6 பதக்கங்களை வென்று திரைத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தற்போதும் வலிமை பட ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் அஜித் இடை இடையே தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தயாராகி வருவதாக தெரிகிறது. தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஏற்ப தனது சுடுதல் விதத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல் வருகிறது. விரைவில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் அவர்கள் கலந்து கொள்வார் என்றும் அஜித் தரப்பிலான வட்டாரங்கள் தகவல்கள் கொடுத்து வருகின்றன.
“ திரையில் அஜித் அவர்களை ஹீரோவாக பார்த்து ரசித்து கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு, இனி நிஜத்திலும் அஜித் அவர்களை ஹீரோவாக கொண்டாட ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, நிச்சயம் கலந்து கொள்வார் தேசிய அளவில் பெருமைகளை தேடி தருவார். நம்பிக்கை கொள்வோம் “
Post a Comment