தொடர்ந்து சில நாட்களாகவே இலங்கையில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு டெல்டாவகை கொரோ வைரஸ் தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 5,935-ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனோ வைரஸ் தொடர்ந்து மாகாணங்களுள் பெருக்கெடுக்க தொடங்கிவிட்டது. மாகாண அரசு பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நிலை இன்னும் மோசம் ஆகலாம் ஆகவே மக்கள் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருங்கள் இலங்கை மாகாண அரசு அறிக்கை விடுத்துள்ளது.
“ கொரோனோ என்னும் பரவல் உலக நாடுகளின் எல்லா எல்லைகளிலும் பரவி வருகின்ற நிலையில், பரவலை நாம் தான் மேற்கொள்கிறோம் என்ற நிலையைக் கூட அறியாமல் மக்கள் தொடர்ந்து தங்களுக்குரிய கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த சூழலிலும் சுதந்திரம் தேடி வருவது தான் வேதனைகளை அளிக்கிறது “
Post a Comment