ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாய் தலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது தலைநகர் காபூலை குறி வைத்து நகர்ந்து வருவதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆப்கன் படைகளின் அசைக்க முடியாத நகராக கருதப்படும் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி உள்ளனர். ஆப்கன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ஆப்கன் படைகள் எதிர்த்து போராடினாலும் தாக்குப்பிடிக்க முடியாது நிலைகுலைந்த நிலையில் உள்ளன.
என்ன தான் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கன் மீண்டும் படைகளைத்திரட்டி முன்னேறுவோம் என்று கம்பீரமாய் அறிக்கை விடுத்தாலும், மக்கள் ஆப்கன் அரசின் வலிமையின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இரக்கமின்றி கொல்லப்படுவதும், தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் தவிப்பதும் ஆப்கனில் தினமும் வாடிக்கையாகி வருகிறது.
“ உலக நாடுகள் என்ன தான் இந்த விஷயத்தை கவனித்து பேசி வந்தாலும் எந்த நாடும் இந்த விஷயத்திற்காக முன்னெடுத்து ஆப்கன் அரசுடன் நிற்கவில்லை என்ற தைரியமே தலிபான்கள் இந்த அளவுக்கு ஒரு அரசின் ஒட்டு மொத்த செயல்பாடுகளுக்குள் ஊடுருவ காரணம் “
Post a Comment