50 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை - மத்திய அரசு - Idam Porul

Top Menu

Top Menu

50 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை - மத்திய அரசு

 


இந்தியாவில் நேற்றைய தினம் வரை ஐம்பது கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 38.9 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 11.1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திகொண்டுள்ளனர்.

மத்தியபிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மஹாராஸ்டிரம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 99.4 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 7.4 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

“ அடுத்த அலையை எதிர்கொள்வதற்கு கவசமாய் அனைவரும் தடுப்பூசி செலுதிக்கொள்ளுங்கள் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates