தலைமைச்செயலகம் முதல் அனைத்து தமிழக அரசுத்துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்று தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டபேரவையில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது மொழி மற்றும் மொழி சம்மந்தமான தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையில் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சிக்கு என்று 80.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் ஆய்விற்கு ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும் அகழாய்வு மேற்கொள்ள இடங்கள் அனைத்தும் தொல்லியல் தளங்களாக அனுசரிக்கப்படும் என்றும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் யாவும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் பழங்கால துறைமுகம் இருந்த இடங்களை கண்டறிந்து அங்கு கடல்சார் துறைகளுடன் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் பட்ஜெட் தாக்கலின் போது நிதிஅமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ மொழி மற்றும் அது சம்மந்தமான தொல்லியல் ஆய்வுகளில் எதுவேனும் தமிழர் மற்றும் தமிழ் பாரம்பரிய சம்மந்தமாய் கிடைத்து விட்டால் அதற்கு முதல் ஆளாய் உரிமை கொண்டாடுகிற திராவிடங்கள் ஒட்டு மொத்த தமிழக தொல்லியல் ஆராய்ச்சிக்கு வெறும் ஐந்து கோடியை ஒதுக்கி இருக்கிறார்களே இது எந்த வகைக்கும் பத்தும் என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் “
Post a Comment