தமிழக வரலாற்றில் இன்று முதல் முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட், தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல் பணிகள் பிரிவுகள் குறித்த அறிக்கையில் தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் விரைவில் அந்த காலி பணியிடங்கள் சீரூடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடும் என்றும் அறிவித்து இருக்கிறார்.
நீண்ட கொரோனோ இடைவெளியில் எந்த வித அரசு பணியிடங்களுக்கும் தேர்வுகள் நடக்காத நிலையில் தேர்வை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்கள். தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கும்.
மேலும் தமிழக அரசின் கீழ் இருக்கும் பல்வேறு காலியிடங்களையும் முறையாக கணக்கிட்டு உடனுக்குடன் நிரப்பினால் அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் மனதும் தன்னிறைவு பெறும்.
“ சோர்ந்து விடாதீர்கள் தேர்வாளர்களே, இது உங்களுக்கான கட்டம், அடுத்து லாக்டவுன் விழுந்து விடுமோ அடுத்து தேர்வு எப்போது வருமோ என்று தயங்கிவிட்டே இருக்காமல் உங்கள் கவனத்தை முழுவதும் படிப்பிலேயே காட்டுங்கள். உங்கள் மேல் உங்களுக்கே தன்னம்பிக்கை வரும் வரை படிப்பதை நிறுத்தாதீர்கள். முயன்று கொண்டே இருங்கள். விடா முயற்சி மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடி தரும் “
Post a Comment