செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா பிரபல சின்னத்திரை நடிகரை மணக்கிறாரா? - Idam Porul

Top Menu

Top Menu

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா பிரபல சின்னத்திரை நடிகரை மணக்கிறாரா?

 



செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, பிரபல சின்னத்திரை நடிகரை விரைவில் மணம் முடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

செம்பருத்தி இந்த சீரியலை அறியாதோர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை அதிலும் அந்த சீரியலில் பார்வதி என்ற பெயரில் வரும் கதாபாத்திரமான ஷபானாவிற்கென்று தனிரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

இந்நிலையில் ஷபானாவிற்கும் பிரபல சின்னத்திரை நடிகருக்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வந்தன. தற்போது அந்த தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கிறார் ’பாக்கியலெட்சுமி’ தொடரில் நடிக்கும் ஆர்யன்.

                            

ஆர்யன், நடிகை ஷபானாவிற்கும் தனக்கும் நிச்சயம் நடந்து முடிந்து விட்டதாக, இருவரும் கைகளில் மோதிரம் போட்டபடி உள்ள போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். அதற்கு இசையும் படி ஷபானாவும் அந்த பதிவுகளுக்கு ஏற்ப தன்னுடைய பதிலை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இருவரும் தெரிவித்து வருகின்றனர்.

“ வாழ்த்துக்கள் ஆர்யன் மற்றும் பார்வதி “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates