தொடர்ந்து ஏற்றமாகவும் இறக்கமாகவும் இருந்து வரும் கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சராசரியாக நாற்பதாயிரம் என்ற நிலைக்கு அருகில் எப்போதும் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,120 ஆகவும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 585 -ஆக உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து வருகின்ற விழாக்காலங்கள், கோவில் நிகழ்வுகள், அரசு நிகழ்வுகள் என்று மக்கள் மொத்தமாய் கூடும் நிகழ்வுகளுக்கும், பண்டிகை தினங்களுக்கும் முறையான கட்டுப்பாடுகள் வகுக்கவில்லையெனில் மூன்றாவது அலையை இந்தியா சீக்கிரமே எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனோ என்னும் சூழல் இலகுவாகும் வரையினில் அரசியல் நிகழ்வுகள், விழாக்கள் என்று மக்களை குறுகிய இடங்களில் மொத்தமாய் கூட்டுவதை தவிர்த்து விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“ உடல்-உயிர் என்பது மிகப்பெரிய வரம், அதை தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இங்கு உரிமை உண்டு. நீங்கள் திடம் வாய்ந்தவராக இருக்கலாம் உங்களுக்கு கொரோனோவை தாங்கி கொள்ளும் சக்தி இருக்கலாம் ஆனால் உங்களால் பரவுகின்ற இன்னொருவருக்கும் அதே சக்தி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா! உங்களால் மட்டுமே உங்களையும் பேண முடியும் சமூகத்தையும் பேண முடியும். விழித்திருப்போம். கொரோனோ என்னும் பேரிடருக்கு முன் கொஞ்ச காலம் பதுங்கியே இருப்போம் “
Post a Comment