ஏழு வருடத்திற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரருக்கு கிடைத்திருக்கும் சதம் - Idam Porul

Top Menu

Top Menu

ஏழு வருடத்திற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரருக்கு கிடைத்திருக்கும் சதம்

 


இந்தியா - இங்கிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார் இந்திய வீரர் கே எல் ராகுல். இது லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு வருடங்களுக்கு பிறருக்கு ஒரு இந்திய வீரருக்கு கிடைக்கும் சதம் ஆகும்.

பொதுவாகவே லார்ட்ஸ் மைதானம் என்பது 'Mecca Of Cricket' என்று எல்லோரோலும் அறியப்படும். அங்கு சதம் அடித்தால் ஒரு மிகப்பெரும் பெருமையாகவே கொள்ளப்படும். கடைசியாக இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே 2014-இல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருந்தார். அதற்கு பிறகு ஏழு வருடங்களாக இந்தியாவிற்கு லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கிடைக்காத நிலையில் தற்போது கே எல் ராகுல் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். ஒட்டு மொத்தமாக ஒன்பது இந்திய வீரர்கள் மட்டுமே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருத்திருந்தனர். தற்போது பத்தாவதாக கே எல் ராகுல்லும் இணைந்துள்ளார்.

“ Mecca Of Cricket -இல் பக்காவாக விளையாடி ஏழு வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு சதத்தை எட்டி பெற்று கொடுத்த இந்திய கிளாசிக் வீரர்
கே எல் ராகுலுக்கு வாழ்த்துக்கள் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates