கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி - Idam Porul

Top Menu

Top Menu

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி

 


கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 447 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,309- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றைய ஒரு நாளில் மட்டும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளன. இது வரை மொத்தமாய் 48 கோடிக்கும் மேல் மாதிரிகள் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைய ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 17,06,598 பேர் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாய் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

“ முகக்கவசம் அணிந்திடுங்கள் தன்னலம் காத்திடுங்கள் சமூக நலனும் பேணிடுங்கள் “ 

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates