ஹசரங்காவின் மேஜிக்கல் சுழலில் வீழ்ந்தது இந்திய அணி...! - Idam Porul

Top Menu

Top Menu

ஹசரங்காவின் மேஜிக்கல் சுழலில் வீழ்ந்தது இந்திய அணி...!

 


இந்தியாவுடனான மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தங்களது தொடர்ச்சியான ஐந்து T20 சீரிஸ் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சணக்கா தலைமையிலான இளம் இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடியது. ஒரு நாள் தொடரை ஏற்கனவே வென்றிருந்த இந்திய அணி
T20 தொடரை 1-2 என்ற கணக்கில் நழுவ விட்டது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி நேற்று ப்ரேமதசா ஸ்டேடியம் கொலம்போவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹசரங்காவின் சுழலில் சிக்கிய இந்திய அணி குறுகிய இடைவெளிகளில் வரிசையாக விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர் முடிவில் வெறும் 81 ரன்களையே எடுத்தது. நான்கு ஓவர் வீசிய ஹசரங்கா வெறும் ஒன்பது ரன்களையே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அடுத்து ஆடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்தது. மூன்று போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தி தொடர் முழுக்க தனது  பந்து வீச்சில் கலக்கிய ஹசரங்கா போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

” எதுவாகினும் இந்த தொடரின் வெற்றி, பல நாட்களாக இது போன்ற ஒரு வெற்றிக்கு தவமிருந்த இலங்கை ரசிகர்களின் இறுக்கமான மனதை இலகுவாக்கியிருக்கும் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates