கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனோ தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக 40,000-க்கும் கீழாக பதிவாகி உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது.
ஓரு பக்கம் தொற்று உயர்ந்தும் குறைந்தும் மாறி மாறி வந்தாலும் அதே அளவிற்கு இந்தியாவில் தொற்று குணமாகி வெளியாகுபவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்று குணமானவர்களின் எண்ணிக்கை 37,927-ஆக உள்ளது. ஒட்டு மொத்த உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்தமாக கொரோனோ பாதிப்பு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20.66 கோடியாகவும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 43 லட்சமாகவும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
“ நாமே சமூகம், நம் நலமே சமூக நலம், நம்மை தற்காத்துக்கொண்டால் சமூகம் அதுவாகவே பாதுகாப்பான ஒன்றாய் மாறிக்கொள்ளும். தொடர்ந்து முகக் கவசம் அணியுங்கள். கொரோனோ விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடியுங்கள் “
Post a Comment