இனி காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு - டி.ஜி.பி சைலேந்திர பாபு - Idam Porul

Top Menu

Top Menu

இனி காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு - டி.ஜி.பி சைலேந்திர பாபு

 


பணிச்சுமை, மன அழுத்தம் ஆதியவற்றை இலகுவாக்கவும், உடல் நலனை பேணிக்கொள்ளவும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.

தொடர்ந்து குற்றவாளிகளோடும் மன அழுத்தங்களோடும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு குடும்பங்களைக்கூட கவனித்துக்கொள்ள முடியாமல் பணியின் பிடியிலேயே இருக்கும் காவலர்கள் இனி வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் சைலேந்திர பாபு.
பிறந்தநாள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றிற்கும் விடுமுறை கேட்பின் கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.

இத்தோடு வாராந்திரவிடுப்பு எடுக்க விருப்பமில்லாமல் பணியில் இருப்பவர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார். எதுவாகினும் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை இச்சமயத்தில் நிறைவேறி இருப்பது அவர்களுக்குள் பெரும் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கும்.

“ மன அழுத்தமே ஒருவனை குற்றம் செய்ய தூண்டும் அந்த வகையில் இனி சிறைக்குள்ளும் குற்றங்கள் குறையும் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates