ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி ஆகிறார் - பி வி சிந்து - Idam Porul

Top Menu

Top Menu

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி ஆகிறார் - பி வி சிந்து

 


டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவை  21-13,21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி வி சிந்து அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கணையோடு போட்டி போட்டு தோற்றிருந்த நிலையில் இன்று வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங் ஜியாவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பி வி சிந்து, ஹி பிங் ஜியாவை 21-13,21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இது இந்தியா இந்த ஒலிம்பிக்கில் பெறும் இரண்டாவது பதக்கம் ஆகும். மேலும் பி வி சிந்து பெறும் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கமும் இது ஆகும். இதன் மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் பி வி சிந்து.

“ இதுவரை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றிருப்பது இரண்டு பதக்கம் இரண்டுமே பெண்கள் வாங்கி தந்தது, ’யார் சொன்னது..? பிறப்பால் பெண்கள் வலிமை குன்றியவர்கள் என்று’, இன்று இந்திய கொடி அவ்வப்போது ஒலிம்பிக்கில் மேல் எழும்பி கம்பீர பார்வை பார்ப்பதற்கு காரணம் அவர்களின் வலிமையாகவே இருக்கிறது என்பது, மகிழ்விற்குரியதே...! “ 

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates