மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் ஹாக்கி பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர் கொண்டது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. எரியும் நெருப்பு மனிதர்களை போலவே களத்தில் அனலாய் ஆடிய இந்திய வீரர்களுக்கு கிரேட் பிரிட்டன் வீரர்களால் சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 3-1 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.
கடைசியாக 1972-ல் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் அரையிறுதியை அடைந்திருந்தது. அதற்கு பின்னர் 49 ஆண்டுகளுக்கு பிறகு அந்த இலக்கை எட்டியிருக்கிறது இன்று நம் இந்திய ஆடவர் ஹாக்கி அணி!
" Go For Gold Warriors, Chak De India "
Post a Comment