ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா - டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Idam Porul

Top Menu

Top Menu

ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா - டோக்கியோ ஒலிம்பிக் 2020

 


டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.தனது இரண்டாவது எறிதலில் அவர் எறிந்த 87.58 மீட்டர் தூரம் அவருக்கு உலக அரங்கில் தங்கத்தை பெற்று தந்திருக்கிறது.

ஏற்கனவே இதற்கு முந்தைய தகுதிச்சுற்றில் தனது முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீராஜ் சோப்ரா. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் எப்படியேனும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் நம்பிக்கையை அப்படியே பூர்த்தி செய்திருக்கிறார் நீராஜ் சோப்ரா. தனிநபர் பிரிவில் இது இந்தியாவிற்கு கிடைத்த இரண்டாவது தங்க பதக்கம். இதற்கு முன் தனிநபர் பிரிவில் அபினவ் பிந்த்ரா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தற்போது நீராஜ் சோப்ராவும் இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் அவருடன் இரண்டாவதாய் பட்டியலில் இணைந்து கொள்கிறார்.

“ நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக் மேடையில் நம் கொடியை உயர உயர பறக்க செய்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் நீராஜ் சோப்ரா “


Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates