இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,867-ஆக உள்ளது. இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 3.6 சதவிகிதம் குறைவு. மேலும் நேற்றைய ஒருநாளில் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 478-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனோவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,30,732-ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருந்துவ அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் மட்டுமே நேற்றைய ஒரு நாள் தொற்று பாதிப்பு 20,452-ஆக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் ஒரு நாள் தொற்று எண்ணிக்கையில் கிட்ட தட்ட 50 சதவிகிதத்தை கேரளா மட்டுமே கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தொற்று அதிகம் பாதித்தவர்கள் உள்ள மாநிலங்களுள் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோருக்கு மஹாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனோ தொற்று பாதிப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
“ மூன்றாவது அலையில் இருக்கிறோமோ இல்லை மூன்றாவது அலை இனி தான் தொடங்குமா இல்லை கடந்து விட்டோமோ என எதைப்பற்றியும் அறிய முடியாத ஒரு சூழலில் குழம்பிபோய் இருக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். நம்மால் முடிந்தது ஒன்றே ஒன்று தான். அது நம்மை பாதுகாத்துக்கொள்வது.தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், தடுப்பூசி செலுத்துக்கொள்ளுங்கள் “
Post a Comment