ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் மற்றும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,277-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 815 ஆக உள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக தினசரி தொற்று பலி ரஷ்யாவில் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் டெல்டா வகை கொரோனோ வலுமையடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக 2,529 பேருக்கு தொற்று புதியதாக பதிவாகி உள்ளதாக ரஷ்ய பெடரல் அறிவித்துள்ளது. நேற்றைய ஒரு நாள் தொற்று பலி 815 ஆக உயர்ந்த நிலையில் ஒட்டு மொத்த பலி நாட்டில் 1,68,864-ஆக உயர்ந்துள்ளது.
“ டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாறிய கொரோனோ உலகெங்கும் தீவிரமெடுக்கும் நிலையில் என்ன செய்வதென்றே அறியாது விழி பிதுங்கி நிற்கிறது உலக நாடுகள் “
Post a Comment