ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு எறியக்கூடிய அனைத்து நெகிழி வகை பொருள்களுக்கும் 2022 முதல் தேசம் முழுக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மண்,கடல்,காடு என்று பூமியின் எங்கு பார்த்தாலும் தவிர்க்க முடியாத குப்பைகளாய் இருக்கிறது இந்த நெகிழிகள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து மண்ணைத்தோண்டினாலும் அது அழியாமல் அப்படியே இருக்கும். எரித்தாலும் காற்றை மாசுபடுத்தும் புதைத்தாலும் பூமியில் மண்ணின் தன்மையை மாசுபடுத்தும். அதனை கருத்தில் கொண்டே 2022 முதல் தேசம் முழுக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நெகிழிக் கட்டுப்பாடுகள் அடுத்து தேசம் முழுக்க வருவதும் ஒரு வகையில் வரவேற்க தக்கதே. இந்த நெகிழிகள் உபயோகம் இதற்கு முன்னரே நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றாலும் இப்போதாவது கட்டுப்பாடுகள் வருகிறதே என்று திருப்தி கொள்வோம்.
“ இந்த நெகிழி கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசுகளுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். தெருக்கடைகளுக்குள் சென்று கேரி பேக்குகளையும் பிளாஸ்டிக் கப்புகளையும் கைப்பற்றுவதை விட்டுவிட்டு அதை தயாரிக்கின்ற கம்பெனிகளுக்குள் புகுந்து சீல் வையுங்கள் அதுவே நெகிழிகளை முழுதும் ஒழிக்கும் “
Post a Comment