உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் தவித்து வரும் இந்த நிலைக்கு காரணம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்று வெள்ளை மாளிகைக்கு எதிரே கைகளில் பதாகைகளே ஏந்திய படி ஆப்கானிய மக்கள் பைடனுக்கு எதிராக கூக்குரலிட்டு ஒரு சிலர் போராடி வருகின்றனர்.
கடந்த இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க படைகள் போராடி வந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை நாடு திரும்ப உத்தரவிட்டார். அந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் மாகாணத்திற்குள் நுழைந்து ஆப்கானிஸ்தானின் அமைதியை சீர்குலைக்க ஆரம்பித்தனர். இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சியையும் கைப்பற்றி இருக்கின்றனர்.
பல்வேறு மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணம் ஜோ பைடனே என்றும், ஜோ பைடன் ஆப்கானிஸ்தானுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஆப்கானிய மக்கள் வெள்ளை மாளிகைக்கு முன் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“ பல்வேறு நாடுகளின் பிரச்சினைகளுக்கு இடையில் சென்று பஞ்சாயத்து பேசி வருவதை அமெரிக்கா நிறுத்தினாலே அந்த நாடுகள் பிரச்சினையின்றி அமைதி காணும் “
Post a Comment