சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் ஆப்கனின் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தி தளம் தனது இணையதளத்தில் அறிவித்து வருகிறது.
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த அமெரிக்க படை ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாக உள் நுழைந்து போரிட்டு கைப்பற்ற தொடங்கினர். ஆப்கன் படைகளும் முழுவீச்சில் போரிடாமல் பின் வாங்கிய நிலையில் எளிதாக ஒவ்வொரு மாகாணங்களாக கைப்பற்றி நேற்று ஆப்கன் தலைநகர் காபூலை நெருங்கினர் தலிபான்கள்.
இந்த நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மாகாணத்திலிருந்து வெளியேறி தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து தலிபான்கள் போர் முடிவுக்கு வந்ததாகவும் இனி ஆட்சி அதிகாரம் எங்கள் கையில் வந்துவிட்டதாகவும் அவர்களது தலிபான் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
“ ஏற்கனவே பெருவாரியான ஆப்கானிய மக்கள் தங்கள் வீடையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் தற்போது உயிரையும் கையில் பிடித்த வண்ணம் மனம் உறைந்து போய் கிடக்கின்றனர் “
Post a Comment