இந்தியாவில் 54.58 கோடி பேரை சென்றடைந்திருக்கும் கொரோனோ தடுப்பூசி! - Idam Porul

Top Menu

Top Menu

இந்தியாவில் 54.58 கோடி பேரை சென்றடைந்திருக்கும் கொரோனோ தடுப்பூசி!

 


அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் ஆகும். அதையும் தாண்டி இந்திய மக்கள் தொகையில் 54.58 கோடி பேருக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

130 கோடி பேர் இருக்கும் இந்தியாவில் நாட்டிற்குள்ளேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதை 54 கோடி பேருக்கு சென்றடையும் வகையில் செய்திருக்கிறது இந்திய அரசு. நம்மை விட அதிக தடுப்பூசி கை இருப்பு வைத்திருக்கும் அமெரிக்க அரசே 16 கோடி தடுப்பூசிகளை தான் மக்களுக்கு விநியோகம் செய்திருக்கும் நிலையில் நம் இந்திய அரசு 56 கோடிக்கும் மேல் மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்திருக்கிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக  கோவா தனது ஒன்றியத்திற்குள் தகுதியுள்ள
90 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 17.43 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

“ தொடர்ந்து தடுப்பூசி திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வந்தாலும் மக்கள் தங்களுக்குரிய கட்டுப்படுகளை மீறினால் இன்று இருக்கும் நிலைமை எப்போத்து வேண்டுமானாலும் தீவிரமான நிலையாக மாறக்கூடும் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates