அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’ - Idam Porul

Top Menu

Top Menu

அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’

 


இரண்டு வருடமாகியும் இன்றளவும் கொரோனோ ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளும் அடுத்த வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. வவ்வால்களிடம் இருந்து மனிதருக்கு பரவும் மார்பர்க் என்னும் வைரஸ் 88 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்தகூடியதாம். இது மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. இது பெரும்பாலும் குகைகளில் வாழும் வவ்வால்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக அறியப்படுகிறது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கினியாவின் சுற்றுபுறப்பகுதிகளில் மார்பர்க் வைரஸ் தாக்கி இறந்தவர்களின் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியதில் இது 88 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்தும் தன்மைக்குரியதாக அறியப்படுகிறது. 

இது மனிதர்களின் வியர்வைகளின் மூலம் இன்னொரு மனிதருக்கு பரவும் என்றும் பரவிய சில நாட்களுக்குள் மனிதருக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே மனிதனின் நகர்வால் இன்று உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் கொரோனோ வைரஸையே தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அடுத்து மற்றுமொரு வைரஸா...?

” ஏலியனே வந்தாலும் எதிர் கொள்ளும் அளவுக்கு அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்த உலக நாடுகள், வைரஸ்சின் வருகையை எதிர்பார்க்கவில்லை போல, எந்த வித போருமின்றி ஆயுதமுமின்றி இன்று அது உலக நாடுகளை ஆட்கொள்கிறது “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates