வலிமை முதல் சிங்கிள் இன்று வெளியாகிறதா....? - Idam Porul

Top Menu

Top Menu

வலிமை முதல் சிங்கிள் இன்று வெளியாகிறதா....?

 


போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று பத்து மணிக்கு மேல் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நீண்ட நாள்களாகவே ’வலிமை அப்டேட் வலிமை அப்டேட்’ என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்பதையே ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது படக்குழுவே இறங்கி வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் வலிமை படத்தின் First Look & Motion Poster வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் முதல் சிங்கிளும் இன்று இரவு வெளியாக இருப்பதாக நம்ப தகுந்த தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவினால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ வலிமை அப்டேட் அப்டேட் என்று தொடர்ச்சியாக கேட்டு வந்த ரசிகர்களுக்கு தற்போது தொடர்ச்சியாக வலிமையான அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

“ அது என்னவோ தெரியவில்லை யுவன் அஜித்திடம் இணைந்துவிட்டால் மட்டும் அவரின் இசையில் அனல் பறக்கிறது, வலிமை எப்படியோ..? பொறுத்திருந்து பார்ப்போம் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates