பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தியதாக மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு - Idam Porul

Top Menu

Top Menu

பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தியதாக மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு



தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன் தற்போது, தான் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பட்டியலின சமூகத்தினரை தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசி உள்ளார். அதன் பொருட்டு அவர் மேல் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது காவல் துறை.

ஏற்கனவே ரஜினி,விஜய்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பிரபலங்களை அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சைகள் செய்து கொண்டிருந்த மீரா மிதுன், தற்போது தான் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களை இழிவாக பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இதனைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ ஒரு ஆண் சர்ச்சைகளிலோ இல்லை ஏதேனும் வழக்குகளிலோ சிக்கும் போது காவல் நிலையத்தில் உள்ள பாத்ரூமில் அடிக்கடி வழுக்கி விழுந்து கைகளிலோ கால்களிலோ மாவுக்கட்டு போடுவது உண்டு, அது போல ஏன் இத்தகைய சர்ச்சைகளில், சர்ச்சையான வழக்குகளில் சிக்கும் பெண்களுக்கு நடப்பதில்லை என்று இது குறித்து சமூக ஆர்வலர்கள் தன் கேள்விகளை முன் வைக்கின்றனர் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates