இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையின்றி விலகியது ஏன்? - Idam Porul

Top Menu

Top Menu

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையின்றி விலகியது ஏன்?

 


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் ஆல்ரவுண்டராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையற்ற இடைவெளி எடுத்துக்கொள்ளப்போவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கடந்த உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்த பென் ஸ்டோக்ஸ். ஆல்ரவுண்டராக அறியப்படும் இவர் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நிலையில் திடீரென்று சர்வதேச போட்டிகளிலிருந்து காலவரையறை இன்றி விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கும் இங்கிலாந்து அணிக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கிலும் அவ்வப்போது தனது திறமையை நிரூபித்து வந்திருந்தார். இது இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பெரும் இழப்பாகவே இருக்கும்.

தொடர் காயங்கள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் நீண்ட காலமாகவே பெரும் மன அழுத்தத்தில் பென் ஸ்டோக்ஸ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

” இந்த மன அழுத்தம் பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை,  மிடில்கிளாஸ், பிச்சைக்காரன், பிரபலமானவன், பிரபலமில்லாதவன் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை போல “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates