தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021-22 அறிக்கையில் நூறு நாள் வேலைத்திட்டம் பற்றிய பிரிவில், இனி நூறு நாள் வேலைத்திட்டம் நூற்று ஐம்பது நாள் வேலைத்திட்டமாக மாற்றி அமைக்கப்படும் என்றும் 273 ரூபாயாக இருந்த தினசரி கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிக்கை விடுக்கப்பட்டது.
கிராம மற்றும் குக்கிராமங்களில் நடைபெறும் சிறு குறு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட குழுவை அப்பணிதன் கீழ் அமைத்து சீரமைப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம். இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் பணியாளர்களை ஆங்காங்கே நடைபெறும் குளத்துப்பணிகள், தூர்வாறும் பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகிறது. ஆனால் இப்பணிகள் மேற்பார்வையாளரின் கீழ் ஒழுங்காக நடைபெறுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காலையில் எந்திரித்து சாப்பாடு பொட்டலத்தை கையில் எடுத்துக்கொண்டு மேற்பார்வையாளர் செல்லும் வரை ஒரு அரைமணிநேரம் மட்டும் வேலை பார்ப்பது போல் நின்று விட்டு அதற்கு பின் ஆங்காங்கே நிழலின் கீழ் உட்கார்ந்து கதை பேசும் திட்டமாக தான் இந்த நூறு நாள் வேலை திட்டம் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
“ முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பின் இன்றைய தேதிக்கு தமிழகத்தின் அனைத்து குளங்களையும் தூர்வாறி இருக்கலாம். இனி இந்த 150 நாள் வேலை வாய்ப்பு திட்டமாவது கதை பேசும் திட்டமாக இல்லாமல் வேலை பார்க்கும் திட்டமாக நடைபெறுமா.? என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது “
Post a Comment