கடந்த மூன்று வருடத்தில் 24568 சிறார்கள் தற்கொலை - தேசிய குற்ற ஆவண காப்பகம் - Idam Porul

Top Menu

Top Menu

கடந்த மூன்று வருடத்தில் 24568 சிறார்கள் தற்கொலை - தேசிய குற்ற ஆவண காப்பகம்

 


2017-19 இடைப்பட்ட வருடத்தில் மட்டும் சுமார் 24568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த மூன்று வருடத்தில் மட்டும் இந்தியாவில் மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி, காதல்  தோல்வி போன்ற காரணங்களால் 24,568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இதில் 13,325 பெண்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.இதில் தமிழகத்தில் மட்டும் 2,035 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிகபட்சமாக பரிட்சையில் தோல்வியுற்ற காரணத்திற்காக 4,046 பேரும், அதற்கு அடுத்தபட்சமாக காதல் தோல்வி காரணமாக 3,315 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கல்வி என்பதை மட்டும் போதிக்கும் கல்விக்கூடங்கள் மாணாக்கர்களுக்கு மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் மன தைரியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அத்தகைய மனதைரியத்தோடு வளர்த்து பேணவேண்டும். உடல் நலத்துக்கு கொடுக்கும் முக்கியவத்தை மன நலனுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

“ தோல்வி பெற்றவனை ஏளனமாய் பார்த்து திட்டுகிற பெற்றோராய் இல்லாமல் தட்டிக்கொடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிற பெற்றோராய் இருந்து பாருங்கள் இந்த தற்கொலையின் எண்ணிக்கையில் ஏதேனும் மாறுதலை அது ஏற்படுத்தலாம் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates