இந்தியாவில் இதுவரை 47 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் - சுகாதாரத்துறை அமைச்சகம் - Idam Porul

Top Menu

Top Menu

இந்தியாவில் இதுவரை 47 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் - சுகாதாரத்துறை அமைச்சகம்

 


மத்திய மாநில அரசுகளும், தன்னார்வல தொண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இந்தியாவில் இது வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவில் இன்றைய தேதி வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 37.26 கோடி பேர் எனவும், இரண்டாவது தவணை எடுத்துக்கொண்டவர்கள் 10.59 கோடி பேர் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமி அது உங்களை எதிர்த்து நிற்கும் போது, அதை நீங்களும் எதிர்த்து நிற்க வேண்டுமெனில் நிச்சயம் தடுப்பூசி அவசியம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். ஒன்றாய் இணைவோம், கொரோனோவை வெல்வோம் “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates